பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 தோள்கள் மூங்கிலையும், அல்குல் தேர்த்தட்டினையும், கூந்தல் அறலையும், இதழ்கள் பவளத்தையும், பற்கள் முத்துக்களையும் ஒத்துத் துலங்கின. ஆடை அணிகலன் களை அமைவுறப் பெற்றிருந்த அவள் பொற்கூட்டினின்று பூவையை யெடுத்துத் தன் மடிமீதிருத்தி, அவற்றிற்குச் சொற்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தாள். இறைவன் அதுபோது உலா வர அவனைக் கண்டு உணர்விழந்தாள். அவன் மாலையினழகையும் வடிவின் பேரழகினையும் கண்ணாரக் கண்டு துய்த்து நெட்டுயிர்த்தாள். நாணந் துறந்து உள்ளம் உருக ஆசைப் பெரு வெள்ளத்தில் அமிழ்ந்து பெருமூச்சு விட்டு நின்றாள். மடந்தை தீந்தமிழின் தெய்வ வடிவினளாம் மடந்தை முத்தாரம் அணிந்திருந்தாள். அவள் மேனியை அணிகலன்கள் அணி செய்தன. தேனையும், மான் மதச் சாந்தையும், சந்தனத் தையும் பூசிக் கலிங்கப் பட்டாடையுடுத்து, நுதலணிகளை நெற்றியில் வகையுறப் புனைந்து தோழியர் புடைசூழ ஒரு தவிசின் மீதிருந்து யாழை யெடுத்துச் சீகாமரப் பண்ணை அமைத்து, இறைவன் மீது மடல் வண்ணம்’ என்னும் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தாள். இந் நிலையில் மால் விடைமீதிவர்ந்து வரும் சிவனின் திருக் கோலம் காணுமுன் மணி யோசை கேட்டாள். பின்னர் இறைவனைக் கண்ட அளவில் அவனது திருமார்பையே உற்றுநோக்கினாள். கண்களில் நீர் நிறைய, நாணம் மீதுார, மனம் ஒரு நிலைப்படாமல் நிற்க, இறைவனை அணைய விரும்பித் தன் மார்பைத்தானே அணைத்துக் கொள்வாள். இறைவனின் கொன்றைப் பூந்தாரின் நிறத்தினைத் தன் மேனி நிறமாகக் கொண்டு புலம்பி நின்றாள். அரிவை அரிவைப் பருவத்தாள் திங்களும் தாரகையும் வில்லும் செழும் புயலும் ஒளி விளங்கும் செவ்வாயும் கொண்ட