பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

713 முகமுடையாள். அல்குற்கு மேகலையை அணிந்து, அழகிய முலைகளின் மேற் சந்தனம் பூசியிருந்தாள். கால்களிற் பாடகமும், முன் கையிற் சூடகமும், தலையிற் பொன்னரி மாலையும், கழுத்தில் முத்துமாலைகளும் சூடித் திருமகள் போன்று பேரழகு வாய்ந்தவளாக விளங்கிய அவள் இன்னிசை வீணையை எடுத்து, இறைவன் மீது காதல் மீதுTரப் பாடல்களைப் பாடினாள். இறைவன் உலா வருதலைக் கண்ட அவள் இன்னிசையும், இற் பிறப்பும், இருந்தமிழும் மன்னிய வீணையும் கைவிட்டு எழுந்தாள். இறைவனின் முகத்தில் தன் கண் இணைகளைச் செலுத்திப் பார்த்தாள். கூந்தலை ஒருபோது அவிழ்ப்பாள்; பின் முடிப்பாள். நெகிழும் ஆடையைத் திருத்தி, கச்சினைக் கட்டி, மாளாக் காதலை மன்றாடிமீது கொண்ட காரணத் தால் மயங்கி நிற்பாள். தன் அங்கை வளை கழலாமல் காத்த அவள், தன் நெகிழும் ஆடையைக் காக்க மறுத் தாள். இவ்வாற்றால் நலமெல்லாம் தோற்று அந் நங்கை நின்றாள். தெரிவை ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள் மயக்கம் தராத மழலைச் சொற்களால் இருள் நீங்கிய வைகறைப் போதினை ஒத்திருந்தாள். இளைஞர்க்குக் கா த ல் வெம்மையை விளைவிப்பதனால், உச்சிப் போதினை ஒத்தவள். முக மண்டலம் திங்கள் போன்றிருத்தலின் நிலவொளி வீசும் இராக்காலம் எனத் தக்கவள். நீண்ட கண்களும் நுணுகிய இடையும் கார் காலத்தினை நிகர்த்திருந்தன. மாந்தளிர் போலும் மேனியும் முருக்க மலர் போன்ற இதழும் இளவேனிலின் அழகை நிகர்த்திருந்தன. இவள் தோழி யருடன் அமர்ந்து வெள்ளிப் பலகையில் பொன்கவற்றுக் காய்களால் மணிச்சூது ஆடிக்கொண்டிருந்தாள். அது போது உலா வந்த இறைவன் தன் எழிற்கோலத்தைக்