பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 கண்ட அவள் தன் பெண்மைச் சிறப்புகளை யெல்லாம் தோற்றொழிந்தாள். ... ' பேரிளம் பெண் பெண்ணரசாய்த் தோன்றிய பெருமையினளாகிய இவள் ஐம்புல இன்பங்களும் ஒருங்கே தரும் இயல்பிற் சிறந்து நின்றாள். கண்ணாடி மண்டிலம் போல ஒளிவிட்டு இலங்கும் அழகிய நகங்களையுடைய மெல்லிய விரல் களையும், கொடிபோல் நு ட ங் கு ம் இடையினையும் கொண்டு திருத்தமுறத் திகழ்ந்தாள். அவள் பொற்செப்பு களிரண்டும், சுணங்கும் திதலையும் பரவிக் கண்டார்க் கெல்லாம் அணங்கும் அமுதமுமாகத் திகழ்ந்தன. கை மலர்கள் காந்த மலர்களைப் பழித்தன. காமவேளின் காதல் மனைவியாகிய இரதி தேவியினை ஒத்து அவள் பேரழகியாகத் திகழ்ந்தாள். முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தம் திறைகொள்ளும் திறனுடையாள். "சீதாரி' என்னும் நறுமணப் பொருளால் அவள் தன் மெய்ம்முழுதும் மணமூட்டிக் கொண்டிருந்தாள். தோழியர் அவளைப் பலபடப் பாராட்டினர். அழகிய வெண்பா வினை விரித்துரைத்துப் பாடிக்கொண்டிருக்கும் அளவில் இறைவன் உலா வர, அவனைக் கண்டு அண்ணலே. வந்தாய்; வளை கவர்ந்தாய்: மாலும் அருந்துயரும் தந்தாய்; இது தகவோ?’ என்று புலம்பி நின்றாள். - இவ்வாறாகச் சிவபெருமான் உலாப் போந்த தெருக் களிற் பெண்களின் ஆரவாரம் பெரிதாக இருந்தது.