பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/709

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைப் பயிற்சி ஆதியும் அந்தமுமில்லாத ஆண்டவனாம் சிவபிரானின் ஒப்புயர்வற்ற சிறப்புகளைப் பலவாறாக எட்டுக் கண்ணி களில் நூலின் தொடக்கத்தே ஆசிரியர் குறிப்பிடும் நயம் அறிந்து இன்புறத்தக்கது. பிறவாதே தோன்றினான், காணாதே காண்பான், துறவாதே யாக்கை துறந்தான், முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான், அகலா தகலியான், ஊழால் உயராதே ஓங்கினான், சூழொளி நூல் ஒதா துணர்ந்தான் முதலிய தொடர்கள் நுட்பஞ் செறிந்தன வாகும். இங்குக் குறிப்பிடப் பெறும் கருத்துகள் தேவார திருவாசகங்களின் பிழிவெனலாம். . . எவ்வுருவில் யாரொருவர் உள் குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் என்ற தொடர், ஆர்உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந்தோன்றும் என்னும் திராவிட சுருதியை ஒத்துள்ளன. அடுத்துச் சீரார் சிவலோகத்தை நம் மனக்கண் முன்னே ஆசிரியர் அழகுறக் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றார். வருணனைத் திறன் உலாக் காட்சிகளும், மகளிரின் பருவ வருணனைகளும் மனங்கொள்ளும் வகையில் உள்ளன. சிவபெருமான் உலா வரும் தெருக்களில் உள்ள மாட மாளிகைகள் சிவ பெருமானின் வடிவழகையே நினைவூட்டின என ஆசிரியர் கூறியுள்ள திறம் அவர்தம் கூர்த்த மதியினைப் புலப்