பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/710

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 வானர்ே தாங்கி மறைஓம்பி வான்பிறையோடு ஊனமில் சூலம் உடையவாய்-ஈனமிலா வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய-ஒள்ளிய மாடம் f என்னும் பகுதி காண்க. - அடுத்து, மாளிகைகளில் வாழும் மகளிர் நடாத்தும் கலவிப்போரினை ஆசிரியர் கவினுறக் கிளத்தியுள்ளார்: மாட நடுவின் மலரார் அமளியே கூடிய போர்க்கள மாக் குறித்துக்-கேடில் சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா-கலந்திகழும் கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாம் தேர் உந்திச்-சூழ்ஒளிய கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் என்ற வருணனை உருவக நலஞ்செறிந்து காணப்படு கின்றது. இப்பகுதியில் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் பெரிதும் ஈடுபட்டிருக்கவேண்டும் போலும்! சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன் அல்குற்றேர் அணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டி நல்லெழில் நெடுங்கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச் செல்வப்போர்க் காமன் சேனை செம்மல்போல் எழுந்த தன்றே என்ற பாடல் மேற்கூறப்பட்ட பகுதியுடன் ஒத்திருக்கக் காணலாம். பெதும்பைப் பருவப்பெண் இயல்பினை,