பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

717 தாமரை ஒன்றின் இரண்டு குழை இரண்டு காமருவு கெண்டை ஓர் செந்தொண்டை - தூமருவும் முத்தம் முரிவெஞ்சிலை சுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் என்றும், மடந்தைப் பருவ மகளின் இயல்பினை, அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகம் கமலம் என்றும், மங்கைப் பருவ மகளின் எழிலை, ஈசன் சிலையும் எழில்வான் பவளமும் சேய்வலங்கை வேலும் திரள்முத்தும்-பாசிலைய வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும் மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டிலமும்-எஞ்சாப் புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும் உருவ நுசுப்பும் மென்தோளும்-மருவினிய கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் என்றும் கூறியுள்ள திறம் உள்ளங் கொள்ளைகொள்ளும் வகையில் அமைந்திருக்கக் காணலாம். அரிவைப் பருவத்தினளாகிய பெண்ணின் அழகை, திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற்-பொங் கொளிசேர் மின்னார்வான் காட்டும் முகவொளியாள் என்றும், தெரிவைப் பருவத்தினள் அழகை வைகறை, யும் நண்பகலும் அந்தியும் இரவும் கார்காலமும் இளவேனி லும் போன்ற இனிய பண்புகள் பலவும் சிறக்கப் பெற்றவள் என்னும் கருத்தமைய, .." மருள்ஓசை இல்மழலை வாய்ச்சொலால் என்றும் இருள் தீர் புலரியே ஒப்பாள்-அருளாலே