பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 வெப்பம் இளையவர்கட்கு ஆக்குதலால் உச்சியோடு ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள்-வெப்பந்தீர்ந்து அந்தளிர்போற் சேவடியும் அங்கையும் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள்-அந்தமில் சீரார்முகம் மதியம் ஆதலாற் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள்-சீராரும் கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்இளங் காரின் சவிகொண்டாள்-வண்ணஞ்சேர் மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால் - வாய்த்த இளவேனில் வண்மையாள் என்று வருணித்திருக்கும் திறம் சேரமான் பெருமாள் நாயனாரின் கூரிய மதிநலத்தினைப் புலப்படுத்தும். இப்பகுதி காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந் தாதிப் பாடலோடும், இதே ஆசிரியரின் பொன்வண்ணத் தந்தாதிப் பாடலோடும் ஒப்பிட்டு நோக்கி உணர்ந்து மகிழ்தற்குரியதாகும். - + = * . . . திருக்குறட் பயிற்சி இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' என்னும் குறளைப் பொன்னேபோல் போற்றி அரிவைப் .பருவத்தினளின் இடையழகினைப் புகழும்போது குறிப் பிட்டுள்ளார். இக் குறட் கருத்தினையே பின்பற்றித் திருத் தக்க தேவர், செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகலம் ஆய எல்லாம் -க்க- - 43. திருக்குறள்; பொருள் செயல் வகை : 2.