பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

719 கல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம் என்றுநுண் நுசுப்பு நைய ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தார் ஒருதடங் குடங்கைக் கண்ணார்' என்று தம் காப்பியத்தில் அணிபெறக் கையாண்டுள்ளார். இப்பகுதி கற்பனை நலமும் கருத்து வளமும் மிளிர்ந்து காணப்படுகின்றது. அடுத்து, பேரிளம்பெண்ணை வருணிக்கும் பொழுது கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' என்ற திருக்குறட் தொடரைக் கையாண்டு, ஐம்புல இன்பங் களும் ஒருசேரத் தருபவள் பேரிளம் பெண் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். இவையன்றியும் மேலும், பல திருக் குறள்களின் எதிரொலியினையும் இந்நூலுட் காணலாம். மேலும் எட்டுத்தொகை நூல்களின் பாக்கள் சிலவற்றின் கருத்தினை ஒத்தனவாகச் சில தொடர்கள் இவ்வுலாவில் இடம் பெற்றிருக்கக் காணலாம். - சொல் நயம் மடந்தைப் பருவத்தாள் காமர இசையெழுப்பி யாழ் வாசித்தலைச் சொல்ல வந்த ஆசிரியர், விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதீண்டு-அடல்வல்ல வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடை _ - - 44. சீவக சிந்தாமணி ; இலக்கணையார் இலம்பகம் . 45. திருக்குறள்; புணர்ச்சி மகிழ்தல் : 1.