பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

721 துத்தம் கைக்கிளை விளரிதாரம் உழைஇளி யோசைபண் கெழுமப் பாடிச் نی சச்சரி கொக்கரை தக்கை யோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்து அத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்பன் இடம் திரு வாலங்காடே" எனவரும் காரைக்காலம்மையார் பாடலை அடியொற்றி யனவாக உள்ளன. மொழி ஈடுபாடு - - பக்தி நலங்கெழுமிய இந் நூலில், ஆசிரியரின் தமிழ்ப் பற்றினையும் காணலாம். மடந்தைப் பருவத்தாளை ஆசிரியர் தீந்தமிழின் தெய்வ வடிவாள்' என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார். பக்தி நலம் பேரிளம் பெண், கண் அவனை அல்லது காணா செவி அவனது எண்ணருஞ் சீர் அல்லது இசைகேளா - அண்ணல் கழலடி அல்லது கைதொழா அஃதான்று அழல் அங்கைக் கொண்டான் மாட்டன்பு என்னும் வெண்பாவினை விரித்துரைத்துப் பாடுவதாக அமைத்திருப்பது ஆசிரியரின் அளப்பரிய பக்தி நலனைப் பறைசாற்றுவதாகும். எனவேதான் இவ்வுலா பொருத் தமுற ஞான உலா எனவும் வழங்கப்படுகிறது. நூலாசிரியர் திருக்கைலாய ஞான உலாவின் ஆசிரியர் சேரமான் பெருமாள் ஆவர். சங்ககாலத்தில் சேரர் மரபு, உதியன் மரபு, இரும்பொறை மரபு என இரு பிரிவுகளாக விளங்கியது. இவர் செங்கோற் பொறையன் என்னும் 46. திருவாலங்காட்டு முத்த திருப்பதிகம் : 9. சே. செ. இ.46