பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 மன்னர்க்குப் பின் ஆண்டவர். இவர் உதியன் மரபைச் சேர்ந்தவர் என்பர். இவர் இயற்பெயர் பெருமாக்கோதை யார் என்பதாகும். சேரர் தலைநகராகிய வஞ்சிக்கு அண்மையில் வி ள ங் கி ய கடற்கரைப்பட்டினமாகிய மகோதை எனப்பட்ட கொடுங்கோளுரில் அமைந்திருந்த திருவஞ்சைக்களம் என்னும் சிவபெருமான் திருக்கோயிலில் இறைபணிகள் இனிதுற ஆற்றிவந்தார். - - 'அளவில் பெருமை அகிலயோனி ஆளும் கழறிற்றறிந்து அவற்றின் உளம் மன்னிய உறுதுயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக் களவு கொலைகள் முதலான கடிந்து' விளங்கிய காரணத்தினால் இவர் கழறிற்றறிவார்: என்னும் சிறப்புப் பெயரினையும் பெற்றார். இவர் சிவனடி யார்களிடத்தே பெரும் பக்தி கொண்டவர். ஒரு முறை நகர்வலம் வந்தபோது, உவர்மண் பொதி சுமந்து மழையில் நனைந்ததனால் உடம்பு வெளுத்து நடந்து வந்து கொண் டிருந்த வண்ணான் ஒருவனைக் கண்டு, சிவனடியார் வேடம் என நினைந்து, தான் ஏறிவந்த யானையினின்றும் இழிந்து, அவன் அடிவணங்கி நின்றார். இதனைத் தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான், - சேரர் பெருமான் தொழக்கண்டு சிங்தை கலங்கி முன்வணங்கி யாரென் றடியேன் தனைக்கொண்டது அடியேன் அடிவண் ணான் என்னச் சேரர் பிரானும் அடிச் சேரன் அடியேன் என்று திருநீற்றின் வார வேடம் நினைப்பித்தீர் - வருந்தா தேகும் எனமொழிந்தார்.41 என்று தம் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னை வழிபட்ட இசை பாடும் பாணர் குலத்தவராய பாணபத்திரருக்கு, மதிமலி புரிசை மாடக் கூடல்' என்று தொடங்கும் திருமுகப் பாசுரம் ஒன்று எழுதித் தந்து, T47. பெரிய புராணம்: கழ றிற்றறிவார் நாயனார் : 19.