பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

723 அதனைச் சேரமான் பெருமாளிடத்துக் கொடுத்துப் பரிசில் பெற்றுக்கொள்ளுமாறு இறைவனே பாணபத்திரரைப் பணித்தார் என்பதும் வரலாற்று வழி அறியக் கிடக்கிறது. நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி நாயனாரோடு இவர் நட்புக்கொண்டு பல திருத்தலங்கட்கும் அவரோடு சென்று வழிபட்டு வந்தார் என்பதும் பெரிய புராணங் கொண்டு அறியலாம். இவர் போர் விரும்பாத அமைதிப் போக்கினர் என்பதை இவர் இயற்றிய பொன்வண்ணத் தந்தாதி பாடல் ஒன்று கொண்டு நன்குணரலாம். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரோடு ஒரே காலத்தில் வாழ்ந்தவராக வரலாற்றின்வழி நன்கு அறியப்படுகின்ற காரணத்தால் இவர் காலம் எட்டாம் நூற்றாண்டென்பர். கல்வெட்டு ஆராய்ச்சி அ றி ஞ ரா ம் காலஞ்சென்ற திரு. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும்,' மகாவித்துவான்திரு. மு. இராகவையங்கார் அவர்களும் " இக் கருத்தினராக இருக்க, தஞ்சை திரு. சீனிவாசப் பிள்ளை அவர்களும், திரு. நாராயண ஐயர் அவர்களும் 2 சேரமான் பெருமாள் நாயனார் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டெனக் குறிப்பிடுவர். உலாக்களில் காலத்தால் முற்பட்ட திருக்கைலாய ஞானவுலா இலக்கியச் சிறப்பும் பக்திநலமும் பாங்குறக் கொண்டு மிளிர்கின்றது. 48. பொன்வண்ணத் தந்தாதி : 21. 49. தமிழ்ப்பொழில்; Vol. II; பக்கம் : 209. 50. சாசனத் தமிழ்க் கவி சரிதம்; பக்கம் 13. 51. தமிழ் வரலாறு; Vol. II பக்கம் : 64. f. 52. Origin and Early History of Saivism in South India, P. 445. - -: