பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகங்கள் இவர் நடுநாட்டில் திருமுனைப்பாடி நாட்டைச் சார்ந்த திருநாவலூர் என்னும் ஊரில் ஆதிசைவ அந்தணர் குலத்தைச் சார்ந்த சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் பிறந்தவர் ஆவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர் என்பதாகும். இவருக்கு வன்றொண்டர். தம்பிரான் தோழர் முதலிய பெயர்களும் உண்டு, திருவாரூரில் பரத்தையர் குடியில் பிறந்த பரவையாரையும், திருவொற்றியூரில் வேளாள மரபிற் பிறந்த சங்கிலியாரை யும் மணந்தவர். சேரநாட்டரசர் சேரமான் பெருமாள் இவருக்கு உற்ற நண்பர் ஆவர். - - திருவொற்றியூரைப் பிரிவதில்லை என்று சங்கிலி யாரிடம் சூள் உரைத்துப் பின் அச்சூள் பொய்த்துப் போயினமையின் திருவொற்றியூரை விட்டு நீங்கிய அளவில் இவர் இ ரு க ண் க ளு ம் போயின. காஞ்சியம்பதியில் இறைவனைப் பாடி ஒரு கண்ணும், திருவாரூரில் மறு கண்ணும் பார்வை பெற்றனர். வெள்ளப் பெருக்கெடுத்த காவிரியை வழிவிடச் செய்தது, திருப்புக்கொளியூர் அவிநாசியில் முதலை யுண்ட பாலனை யெழுப்பியது. முதலியன இவர்தம் பாடலால் நிகழ்த்திய அற்புதச் செயல் களாகும். இவர் பாடல்கள் சைவத் திருமுறைகள் பன்னி ரண்டனுள் ஏழாந் திருமுறையைச் சார்ந்ததாகும். இவர் பாடல்கள் நயம் நிறைந்தனவாகும். இவர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் ஆய்ந்து முடிவு கண்டுள்ளனர். -