பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

725 திரு வஞ்ை சக் களம் பதிக வரலாறு - சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பு க்கொளியூர் அவிநா யில் முதலையுண்ட பாலனை அழைத்துத் தந்து மலைநாடு சென்றார். சேரமான் பெருமாள் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளும் செய்தி கேட்டு மனமகிழ்ந்து நகரை அலங்கரித்து அமைச்சர்கள் புடைசூழச் சென்று மலை நாட்டெல்லையில் எதிர்கொண்டு வணங்கி யானைமேல் அழைத்து வந்து வஞ்சிமாநகரில் அவருடன் தங்கி மகிழ் வுடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து பல தலங்களையும் வணங்கி மகோதையை அடைந்தனர். அந்நகரில் உள்ள *திருவஞ்சைக் களம்' என்னும் திருக்கோயிலை வலம் வந்து இறைவனைப் பணிந்து இவ்வுலகில் பாசத்தால் கட்ட ப் பட்ட மனை வாழ்க்கையை அறுத்திட்டுத் திருவடியில் சேர்த் தருளவேண்டும் என்னும் குறிப்போடு பாடியருளியது இத் திருப்பதிகம்." இப்பதிகத்தின் குறிப்பு இத் திருப்பதிகம், சிவபெருமான், உலகத்தவர் வெறுக்கும் கோலங்கள் பலவற்றை விரும்பி மேற்கொள்ளு தற்குக் காரணம் என்ன என்று வினவும் முகத்தால், அவை யனைத்தும் அவன்தன் பொருட்டன்றி, உயிர்களின் பாசத்தை அறுத்தற்பொருட்டே கொள்கின்றனவாதலைப் பெற வைத்து, தமது வாழ்க்கையாகிய பாசத்தையும் அறுத்திட வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற அருளிச் செய்ததாகும். - சிவபெருமானின் வடிவு தலைக்குத் தலைமாலையை அணிந்துள்ளான். சடை யின்மேல் கங்கையென்னும் ஆற்றைத் தாங்கியுள்ளான். Еннычччиннин -* 1. பெரிய புரானம்; வெள்ளானைச் சருக்கம்: 14.30.