பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித் தெடுத்து அரையில் உடுத்தியுள்ளான். அவ் வுடையின் மேல், சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, யுள்ளான். விரும்பத்தகாத பாம்பைப் பிடித்து ஆட்டுகின்றான்; பாம்பைப் பூணாகப் பூணுகின்றான். சடையின் கண் பிறையைச் சூடியுள்ளான். சாம்பலை உடம்பு முழுதும் பூசிக் கொண்டுள்ளான். இழிந்த எருதினையே ஊர்தி யாகக் கொண்டுள்ளான். மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம்போலும் அழகிய திருமேனியை உடையவன். சிவபெருமானின் செயல் இராப்பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடு கிறான். ". - - இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தான். பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் (கழுத்து) கறுப் பானான். பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை அறுத்தான். - - சிவனை நம்பியாரூரர் செப்பிடும் வகை சிவனை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவன்; முனிவர்கட்கெல்லாம் முனிவன்; தேவர்கட் கெல்லாம் தேவன். உலகத்தை இயக்குதலில் எழுதப்படும் எழுத்துகளுக்கு உயிரெழுத்துப் போன்றவன்; இல்லாதவனாயும் உள்ள வனாகவும் விளங்குகின்றான். உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிருக்கு மேகம் போன்றவன். அடியார்களுக்கு அணியனாய் (நெருக்கமாய்) இருக்கின்ற காரணத்தால் அவரோடு ஒரு குடிப் பிறப்பினன் போன்றவன். எப்