பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

727 பொருளின் ஆக்கத்திற்கும் அறிவிற்கும் காரணன். பொருள் களின் ஆக்கத்திற்குக் காரணங்களாகப் பிற பிறவற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் அவனே; புலன் உணர்விற்குக் காரணமான நாக்கு, செவி, கண் என்பனவும் சிவனே. சிவனை வணங்கினால் சித்திக்கும் நிலைகள் சிவனை உள்ளந் தெளியப் பெற்றால் சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து சிவனை வணங்குபவர் இறத்தலும் பிறத்தலும் இலராவர். மத்தளமும் வேய்ங்குழலும், * மந்தம்' என்னும் அ ள வா. க இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்று திருவாரூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய, இசைநலம் மிக்க, தமிழ்ச் சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக் கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணியவல்லவர், நிலையாமை நீங்கப்பெற்று, நிலைபேறுடையவராவர். நம்பியாரூரர் வாழ்வு - நம்பியாரூரர் தனது மனைவாழ்க்கையை வெறுத்து விட்டதாகவும், உடம்பாலும் அவ் மனைவாழ்க்கையைத் துறந்துவிட்டதாகவும் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பாடலிலும் அவர் தந்தையே!’ எனச் சிவனை விளித்து அவர் வடிவழகினையும் அருட்செயலினை யும் விதந்து பாடிச் சிவனின் திருவடிப் பேற்றினை இரக்கின்றார். - மகோதையும் திருவஞ்சைக்களமும் குறிக்கப்படுமாறு: மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பன வாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய, மகோதை" என்னும்