பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/722

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 நகரத்தின் கண்ணுள்ள, அழகு நிறைந்த சோலைகளை யுடையது திருவஞ்சைக்களம்' என்னும் திருக்கோயில். வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துகளை ஈன, இங்ங்னம் அலைத்து முழங்கு கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, :மகோதை" என்னும் நகரின் கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடையது திருவஞ்சைக்களம் என்னும் திருக் கோயில். மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய அழகு நிறைந்த சோலைகளை யுடையது திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயில். துளிகளைத் துாற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்துவந்து மோதி முழங்கி, வலம்புரிச், சங்கின் இனிய ஒசையால் யாவரையும் தன்பால் வருவிக் கின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய மகோதை என்னும் தலத்தில் உள்ள, அழகுநிறைந்த சோலைகளை யுடையது திருவஞ்சைக்களம். பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக் கலங்களினது செலவினையுடைய மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடையது திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயில். * வலிமையோடு, சங்கு, சிப்பி, முத்து என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தை யுடையதாகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய மகோதை என்னும் நகரத்தின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளை யுடையது திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயில்.