பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

729. விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகை யினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி, நடுவண் செல்லச் செலுத்த ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடையது திரு வஞ்சைக்களம் என்னும் திருகோயில். கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள அழகுநிறைந்த சோலைகளை யுடையது திருவனஞ் சக்களம் என்னும் திருக்கோயில். முத்துகள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பன போல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்துவந்து வீசி, வலம்புரிச் சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்கு கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடையது திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயில். -- அழகிய குளிர்ந்த கரையின்கண்ணதாகிய மகோதை என்னும் நகரின்கண் உள்ளது திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயில். முடிப்பது கங்கை சேரர் பெருமானுடன் சுந்தரர், ஐயாற்றிறைவரைத் தொழுது பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, கொங்கு நாட்டைக் கடந்து மலைநாடு சென்று சேரமான் பெருமாளது தலைநகரமாகிய கொடுங்கோளுரையடைந்து அவருடன் திருவஞ்சைக் களத்து இறைவரை வணங்கிப் பாடி யருளியது இப் பதிகம் (முடிப்பது கங்கை). திருவஞ்சைக்களத்துப் பெருமான் திருமுன்பில் அருளிச் செய்தது. இது சிவபெருமானது தன்மையை ஆராயும் முறையில் அருளிச் செய்தது. சிவபெருமானைப் பற்றிய செய்திகள் சிவன் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும். திருக்கைகளால் பாம்பைப் பிடித்துள்ளான். மலைமகளைத்