பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 தன் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டுள்ளான். சுடலைச் சாம்பலைத் தன் திருமேனியில் பூசியுள்ளான். சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பேயோடு பித்தனாக ஆடுகின்றான். அவனுடைய சடைமுடியில் பாம்புடன் வன்னி, ஊமத்தை, பிறை முதலியவைகளைத் தரித்துள்ளான். கொன்றை மாலை அவனுக்குரிய மாலையாகும். மதயானையினின்றும் உரித்த தோலை உடையாக உடுத்துள்ளான். அங்கையில் நெருப்பை ஏந்தியுள்ளான். முல்லை நிலத்தில் உள்ள வெள்ளை எருதினை ஊர்தியாகக் கொண்டுள்ளான். திரிபுரத்தை எரித்த் தேவதேவனாக விளங்குகின்றான். மாணிக்கம் போன்ற அவன், கறுப்பு நிறத்தையுடைய கண்டத்தை யுடையவன். - - தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நிற்கும் அடியவர் துன்பங்களைக் களைகின்றான். திருமா லும், பிரமனும், ஏன் யாராலும் அறியப்படாத முதலும் முடிவும் உடையவன். அன்பு செய்யும் அடியார்க்குத் தலை வனாகிய அவனுக்கு ஊர் என ஒன்றில்லை; உலக முழுதுமே அவனுக்கு ஊர்களாகும். அதே போன்று அவனுக்குப் பெயரும் ஒன்றல்ல; ஒர் ஆயிரமாகும். உயரிய கருத்து இவ்வுலகில் உ ள் ள உயிர்களைக் கொல்லுதல் நன்னெறிக்குத் தடை என்பதனைச் சுந்தரர் ஒரிடத்தில் வற்புறுத்துகின்றார். சமணர்களைப் பற்றிய குறிப்பு சமணர்களைத் தாக்கி ஓரிடத்தில் சுந்தரர் குறிப்பிடு கின்றார். அவர்கள் கரிய மனத்தையுடையவர்கள் என்றும், கஞ்சியைக் குடிக்கின்றவர்கள் என்றும், கழுமரங்கள் போலத் தோன்றுகின்றவர்கள் என்றும், அவர்கள் சிவனை இகழ்ந்து பேசுகின்றனர் என்றும் சுந்தரர் குறிப்பிடுகின்றார்.