பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

731 பிற கடவுளர் குறிக்கப்படல் மலைமகள் : மூங்கில்போலும் தோள்களையுடையவள் என்றும், மலையரசன் மகள் என்றும், சிவனால் விரும்பப் படுபவள் என்றும், சிவனது திருமேனியில் ஒரு கூறாய் விளங்குபவள் என்றும் மலைமகள் குறிப்பிடப்பெற். றுள்ளாள். திருமால்: சிவனின் அடியைக் காண முயன்று அறிய முடியாமற் போனவர் என்று திருமால் குறிப்பிடப் பெற்றுள்ளார். பிரமன்: பூமேல் இருப்பவன் என்றும், சிவனின் முடியைக் காண முயன்று அறிய முடியாமற் போனவர் என்றும் பிரமன் குறிப்பிடப்பெற்றுள்ளார். அடியார் சிவனைப் பரவும் முறை சிவபெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச் சென்று, நன்னெறியிற் பொருந்தி, தூய மலர்களைச் சொரிந்து, மறைகளாகிய பாட்டுகளைப் பாடி அவன் அடியிணைகளைப் போற்றுகின்றனர். முேடிப்பது கங்கை’ என்னும் இப் பதிகம் சிவனை விரும்பிப் பாடியனவும் ஏசிப் பாடியனவும் ஆகிய கருத்து களைக் கொண்டதாகும். -