பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா சைவத் திருமுறைகள் பன்னிரண்டு ஆகும். அவற்றுள் ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் நூல்களாகும். ஒன்பதாந் திருமுறையினைப் பாடிய புலவர் ஒன்பதின்மர் ஆவர். அவர்கள் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி 35 ΠΓ L- Gλ! நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிய முதனார், புருடோத்த நம்பி, சேதிராயர் முதலியோ :ராவர். திருவிசைப்பாவோடு திருப்பல்லாண்டினையும் பாடியவர் சேந்தனார் ஆவர். வேணாட்டடிகள் திருவிசைப்பாவில் ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார். திருவிசைப்பாவில் உள்ள மிகுதியான பாடல்கள் சிதம்பரத்தைப் பற்றியனவாகும். வேணாட்டடி கள் திருவிசைப்பாவும் தில்லை என வழங்கும் சிதம்பரத் தலத்தைப் பற்றிப் பாடப்பெற்றதாகும். இத் தில்லைப் பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது. வேணாட்டடிகள் என்ற சிறப்புப் பெயர், தென் திருவாங்கூர்ப் பகுதியை ஆண்டுவந்த அரசர்க்கு வழங்கி வந்ததாகும். வேணாட்டடிகள் வீரகேரள ரவிவர்மன், *திருவேணாட்டடிகள் வீரராமன் கேரள வர்மன்' என வழங்கும் தென் திருவாங்கூர்ப் பகுதியை ஆண்ட அரசர் களின் பெயர்கள் இவ்வுண்மையைத் தெரிவிக்கின்றன. இவ் வேணாட்டடிகளை, அவ்வரசருட் பழமையானவர் என்றே கருதல் தகும்." 1. T. A. S. Vol I; p. 384. 2 T. A. S. Vol I; p. 63. 3. திரு. மு. இராகவையங்கார், சேர வேந்தர் செய்யுட் கோவை; இரண்டாம் தொகுதி: ப. 165.