பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

733 சிவபெருமான் குறிப்பிடப்பெறும் முறை அழகிய தில்லைப் பதியில் ஆனந்தத் தாண்டவம் செய்கின்றவன். புதியராய் வந்த அடியாரின் தொண் டினைப் பெரிதும் விரும்புபவன்; ஒழுகுகின்ற மதநீரையும், பானை போன்ற வயிற்றினையுமுடைய யானைமுகக் கடவுளாகிய விநாயகரை மகனாக உடைய தலைவன். அகத்திய முனிவர்க்குப் பிரணவத்தை அறியும்படி அறி. வுறுத்தும் வேதநூல் தந்தவன். பூவுலகத்தோடு வானுலகம் வரையிலுள்ள மனிதர்கள் முதல் தேவர்கள் வரையுள்ள யாவர்க்கும் ஆதரவாக இருப்பவன். வேணாட்டடிகள் வேண்டுவன அடிமையை விரும்பும் சிவன் எவ்வித ஆதரவும் அற்ற தன் தொண்டினையும் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். புதியவராய் வந்த அடியவரின் தொண்டினைப் பெரிதும் விரும்பும் அவன், வழிவழிவந்த அடியவனான தனது: தொண்டினையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். வாய் வாட்டமுற்று, நாவினால் உளறி, சிவனை நினைந்து, மனம் உருகி, முத்தியைப் பெறுதற்குத் தான் செய்யும் குற்றேவலை ஏற்றுக்கொண்டு பொய்யோடு கூடாமல் இருக்கக் கைகொடுத்து உதவி தன்னை வந்து அடையும். படி, சிவன் அருளுதல் வேண்டும். தோள்கள் பொருந்தவும், கைகள் பொருந்தவும், அடியார்கள் பொருந்தவும் சிவனை வணங்கினால் அடியவனாகிய தனக்குத் தனது திரு. வடிகளை அடைவித்தல் வேண்டும். அடியவர்க்கு அடிய வனாகிய ஒருவன், செய்யுள் வடிவாகப் பொருந்திய தமிழ்ப் பாடலின் தொகுதியை எடுத்துக் கூறி, ஒயாமல் கூப்பிட்டுக்கொண்டே இருக்கின்றமை கருதி விரைந்து அருள் செய்யின் மிகவும் நன்றாக இருக்கும்; அன்றியும் நாயடியேனாகிய தான் இறக்குந் தருணத்திலேனும் சிவனைத் தரிசித்தலைச் சிவன் தடை செய்ய முடியாது. என்று உள்ளம் நெக்குருக வேணாட்டடிகள் சிவபெருமானின் அருளுக்காக இரங்கி மொழிகின்றார்.