பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/728

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 உவமை நலம் இளம் வாழைக்காய், இளைய கறிவேப்பிலை கைத்தாலும் இவற்றை விரும்புவர்கள் கறி செய்தற்குப் பயன் படுத்துவார்கள். அதுபோல அடிமைத் தொழிலை விரும்புகின்றவர்கள், அவ் வடிமை இழிவான செயல்களைச் செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டு உவமை யணி இவ் வுவமையினின்றும் பிறங்குகின்றது. கன்றைப் பிரிந்த தாய்ப்பசு போல இறைவனைப் பிரிந்த வேணாட்டடிகள் கதறுகின்றார். பழமொழிகள் பழமொழிகள் சில இவர்தம் பாடலில் இடம் பெற்றுப் பாடல்களுக்கு அழகும் நயமும் கூட்டுவிக்கக் காணலாம். - எவரும் தம்முடைய பானையைச் சாய்த்து நீரைப் பிடிக்க மாட்டார்கள் : ; நீர் நிறைந்த குளத்தின் அருகிலே பள்ளத்திலுள்ள மரத்திற்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாயாதோ?'; ஒர் எருதினுக்கு இடுவது புல்லும், மற்றோர் எருதினுக்கு இடுவது வைக்கோலும் முதலான பழ மொழிகள் தகுந்த இடங்களில் பாட்டில் அமைந்து வேணாட்டடிகள் சொல்ல வந்த பொருளைத் தெளிவு படுத்துகின்றன. ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், மற் றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் என்று இன்றும் நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் பழமொழி மூன்றாவ தாக எடுத்துக்காட்டப் பெற்ற பழமொழியோடு ஒப்பிட்டுக் காணக்கூடியதாகும். 1. கைச்சாலுங் சிறு கதலி யிலை வேம்பும் கறிகொள் - வார்-திருவிசைப்பா; 1 : 2. 2. தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல் லும்’-2 : 1. 3. பொசியாதோ கீழ்க்கொம்பு கிறைகுளமென் - றதுபோல’-3 : 1. - - 4. இடுவதுபுல் ஓரெருதுக்(கு) ஒன்றினுக்கு - வையிடுதல் - :3. っ。