பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

735 வேணாட்டடிகள் இறைவன் மாட்டுக் கொண்ட ஆராத அன்பின் அடிமைத்திறம் கசந்தாலும் இளம் வாழைக்காய் இளம் கறிவேப்பிலை இவற்றை விரும்புபவர்கள் கறி செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவதுபோல, அடிமையை விரும்பும் இறைவன், தான் இழிவான செயலைச் செய்தாலும் பொறுத்துக் கொண்டு தன் தொண்டினைச் சிவன் விரும்பாதிருக்கிறான் என்கிறார். எவரும் தமது பானையைச் சாய்க்காமல் பிடித்து நீரை நிரப்பிக் கொள்வதுபோல, இறைவன் அடி யவனான தனது தொண்டினை ஏற்றுத் தன்னை அவனு டைய கருணையினால் நிரப்ப வேண்டும் என்று வேண்டு கிறார். நீர் நிறைந்த குளத்தின் அருகிலே பள்ளத்திலுள்ள மரத்திற்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாய்தல்போல, திக்கு நோக்கி மருண்டு விழித்துச் சிவபெருமானே என்று ஓவென்று கதறும் தன்பால் அருளுதல் வேண்டும். நிற்கும். போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும், எழுந் திருக்கும்போதும், சிவனையே நினைந்து வணங்குகின்ற அவனுடைய அடியவனான தான், ஐம்புலன்களின் சேட்டையால் ஒருகால் நினையாதொழியினும் அவ்வாறு இருக்கவிடாது செய்தல் வேண்டும். அகத்தியனுக்குப் பிரணவத்தை அறியும்படி அறிவுறுத்தியது, ஒர் எரு தினுக்குப் புல் இடுதலைப் போன்ற செயலென்றும், தனக்கு அருளாதது மற்றோர் எருதினுக்கு வைக்கோல் இடுதலும் போலுமான செயலென்றும் வேணாட்டடிகள் குறிப்பிடு கின்றார். மேலும், பூவுலகத்தோடு வானுலகம் வரை யிலுள்ள மனிதர்கள் முதல் தேவர்கள் வரையுள்ள யாவர்க்கும் ஆதரவாக இருக்கும் சிவன் தனக்கு ஆதரவா காமல் போதலும், கலக்கமடைந்து தான் பெருமை பொருந்திய தலைவனே என்று அ ழு து துன்புற்று மேனோக்கிக் கூவி அழைத்தாலும் தன்னை வந்து அடைய வில்லை என்கிறார். - -