பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றுதல் - = இவர் பாடல்தோறும் கையாளும்-சிவனைக் குறிக்கும். நம்பான்’ என்ற சொல், நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்' என்ற சம்பந்தர் தேவாரத்தையும், பேழ்கணித்துச் சிவபெருமான் ஒஎனினும் என்ற தொடர், பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே' என்ற திருவாசகத்தையும், நாயடியேன் சாவாயும் நினைக் கண் டால் இனியுனக்குத் தடுப்பரிதே' என்ற தொடர், :பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத் தால், இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென்று எதிர்ப்படுமே" என்ற அப்பர் தேவார அடிகளையும் அடி யொற்றியதாகும். பின்வந்தோர் கையாளன் “நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன்' என்ற தொடர், நின்றும் இருந்தும் கிடந்தும் நினை மின்கள் என்றும் சிவன்றாள் இணை' என்ற வருத்தமற வுய்யும் வழி' என்னும் நூற் குறள் வெண்பாவிற்கும், நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை' என்ற அபிராமி அந்தாதி அடிக்கும் வழிகாட்டியாய் இருந்திருத்தல் வேண்டும். முடிவுரை இத் தில்லைப் பதிகத்தில், வேணாட்டடிகளின் உலக. அனுபவமும், வாக்கின் சிறப்பும், பத்தித் திறமும் பாங்குற. மிளிரும் பான்மையினைக் காணலாம்.