பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 களவழி நாற்பது, தகடுர் யாத்திரை, முத்தொள் ளாயிரம் முதலான நூல்களில் சேரரைப் பற்றிய செய்திகள் சிறக்க உண்டு. தொல்காப்பியத்தின் பின்னர்ப் புறப் பொருள் இலக்கணம் கூற எழுந்த புறப்பொருள் வெண்பா மாலையை இயற்றிய ஐயனாரிதனாரும் ஒரு சேர இளவல் ஆவர். பக்தி இலக்கியத் துறையிலும் கணிசமான பங்கு சேரநாட்டுக்குரியதாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒரு வரான குலசேகர ஆழ்வார் பாடியருளிய பெருமாள் திரு மொழி கவிதைப் பெற்றியும் பக்தி அனுபவமும் நிறைந்த பல பாடல்களைக் கொண்டதாகும். அவற்றிலும் திருவேங் கடத்தம் மான் விஷயமாகவும், திருவித்துவக்கோட்டு அம்மான் விஷயமாகவும் குலசேகரர் பாடியுள்ள பாசுரங் கள் கல்நெஞ்சையும் கனிவிப்பனவாகும். இப்பாசுரங்களிற் காணலாகும். உவமைகள் ஒரு புத்துலகையே தோற்று விக்கும் தன்மை கொண்டனவாகும். சேரமான் பெருமாள் நாயனார் அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களில் ஒரு வராவர். இவர் பாடியுள்ள திருக்கைலாய ஞானவுலா ஆதியுலா என்றும் அழைக்கப்பெறும். பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை முதலியன இவர் தம் பிற படைப்புகளாகும். சுந்தரரும் வேணாட்டடிகளும் சேரநாட்டைப் பற்றிப் பாடியுள்ளனர். இவ்வாறாகத் தமிழ்மொழியின் முதல் இலக்கண நூலும், முதற் காப்பியமும், முதல் உலாவும் சேரநாட்டுப் புலவர்களின் கொடையாகத் திகழ்கின்றன. மதில் கடந்தல்லது உண்ணோம் புகா என்று புகலும் தறுகண்மை சேர மறவர்க்கிருந்தது. சுருங்கச்சொன்னால் சேரர் ஈரமும் வீரமும் இமயமலையாய் ஒளிர்கின்றன. சேரநாட்டு வளம் இயற்கை யழகுடன் கிளத்தப்பட்டுள்ளது. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையினை அறிந்து கொள் வதற்குப் பண்டைய இலக்கியங்களும், கல்வெட்டுகளும், பிற வரலாற்றுக் குறிப்புகளும் துணையாகின்றன. சேர