பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/735

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74.1 நாட்டுச் செந்தமிழர் தம் அக்காலத்திய வாழ்க்கை முறை, அரசியல் முறை, சமுதாய அமைப்பு முதலாயின குறித்துப் :பதிற்றுப்பத்து' என்னும் நூல் தோன்றிய சங்க காலந் தொட்டு, பத்தி இலக்கியங்கள் காலம் ஈறாக இதுகாறும் ஆராயப் பெற்றன. பழந்தமிழர்களுடைய வாழ்க்கை அமைப்புகள் பற்றி அறிய இந்நூல்கள் பெரிதும் துணை நிற்கின்றன என்பது வெள்ளிடைமலை. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மாற்றமும் போக்கும் எப்படியெப்படி யெல்லாம் மாறுகின்றன என்பதை அறிய இவ்விலக்கியங்கள் பயன்படுகின்றன. இன்றுள்ள சேர நாடு இன்றைய தமிழ் எல்லைகளினின்றும் மாறுபட்டாலும் அங்கு வாழும் மக்களிடம் இப்பொழுதும் நம் பண்பாட்டுக் கூறுகளே மிகுதியாக இடம் பெற்றிருப்பது எண்ணுதற்குரிய தாகும். அக்காலத்திய மக்கள் கொண்டிருந்த பழக்க வழக்கங்களுள் இன்றும் சில எச்சமாக நின்று பண்டைய வாழ்வின் நெறிமுறைகளை எடுத்தியம்புகின்றன. அவற்றை யெல்லாம் ஒப்பு நோக்கி ஆராய்தற்கு இவ்வகை நூல்கள் பயன்படக் கூடும். சேரமன்னர்களின் வரலாற்றினை அறிந்து கொள் வதற்குப் பதிற்றுப்பத்து பேரளவில் துணையாகின்றது. மன்னர்களுடைய முடியாட்சிச் சிறப்புகளும், வீரச் செயல் களும் இந்நூலில் நன்கு புலனாவதைக் காணலாம். பதிற்றுப்பத்தின் தலைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி ஆய்வுக்குரியனவாய் விளங்குவன. திருமாலின் புகழ் பாடும் பாடல் ஒன்றின் பெயர் கமழ் குரல் துழாய்". இங்ங்னம் பாடலின் தலைப்பே சமயக் குறிப்பாய் விளங்கும் பான்மை யையும் அறிய முடிகின்றது. அவ்வாறே எட்டுத்தொகை நூல்கள் காட்டும் அக வாழ்க்கையும், புறவாழ்க்கையும் மாந்த நாகரிக வரலாற்று வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கனவாய் விளங்குகின்றன. சங்க நூல்கள் காட்டும் அகப்பொருள் நுட்பங்கள் தனி.