பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 தன்மை வாய்ந்தவை. உள்ளுறை, இறைச்சி நயம் பொருந்திய அப்பாடல்கள் ஒவ்வொரு நாட்டின் அக ச் சூழலையும் புறச்சூழலையும் காட்டுவனவாம். ேச ர நாட்டின் பகுதிகளாக இன்று விளங்கும் இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் சங்க கால ஊர்களின் எச்சங்களாக விளங்குகின்றன எனலாம். குலசேகரர் பாடிய பாடல் களின் பொருள் விளக்கங்களாகவும் பண்பாட்டு விளக்கங்க ளாகவும் அவை திகழும் பான்மையையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். எனவே அன்றைய இலக்கியங்கள் கூறும் செய்திகளோடு இன்றைய நிலையில் திகழும் கூறு களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மாந்த வளர்ச்சியின் வேகமும், மாற்றமும் புலனாகும். சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்களை ஒருமுக மாகத் தொகுத்துப் பார்க்கும்போது, அவற்றைப் பாடி யோர் பலராயினும் அப்பாடல்களினிடையே இழையோடும் சமூக, வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளையும் அவற்றின் போக்கினையும் நாம் ஒரளவு அறிய முடிகின்றது எனலாம்.