பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்புகள் 1. சேரநாட்டைப் பாடிய புலவர்கள் 1 அரிசில் கிழார் : கொள்ளிடத்தின் வடபால் அரி யிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஒரூரின் பெயர் அரிசில் என்பதன் மருஉவாகக் கருதப்படுகிறது. கிழார் என்றால் உரியவர் என்று பொருள்படும். கிழாரென்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப் பெயராக இருந்தது. பதிற்றுப் பத்தில் எட்டாம் பத்தைப் பாடியதால் தகடுரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையிடம் ஒன்பது நூறாயிரங் காணம் பரிசில் பெற்றதாகப் பதிகம் கூறுகிறது. தகடுர் யாத்திரை யென்னும் நூலில் இவராற் பாடப்பட்ட பாடல் களும் சில உள்ளனவென்பது தொல்காப்பியப் புறத்திணை யியலில் 8, 12 ஆம் நூற்பாக்களுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் விளங்குகிறது. இவர் .ெ ச ய் த பாடல்கள் : குறுந்தொகை1-93; பதிற்றுப்பத்து-71-80., புறம்-146, 230, 231, 281, 285, 300, 304, 342. திருவள்ளுவமாலை 13-வது பாடல் இவர் பெயரால் வழங்குகிறது. இவர் எழினியைக் குறித்துப் பாடும் புறப்பாடலில் கன்றை மேவிய ஆனிரை மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும், சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போக்கர் தாம் வேண்டிய இடத்தே தங்கவும், களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றிறே கிடப்பவும் எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங் கலங்காத செவ்விய ஆட்சியினை உடையவன் எழினி’ எ ன் று குறிக்கின்றார். கடையெழு வள்ளல்களுள்