பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 ஒருவனாகிய பேகனைப் பாடியிருத்தலின் இவர் அவன் காலத்தினராக இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. 2. இளங்கீரனார் : இவரும் எயினந்தை மகனார் இளங்கீரனாரென்பவரும் ஒருவரேயென்று சிலர் கூறுவர். அங்ங்னமாயின் இவர் வேடர் மரபினர் ஆவர். பாலைத் திணையைப் பலவாறு பாடியுள்ளார். எட்டுத்தொகையில் இவரியற்றியுள்ள செய்யுட்கள் 14 (நற்றிணை-6; அக நானுாறு-8). 3. இளங்கோவடிகள் : இவர் சேரன் செங்குட்டு வணின் தம்பி. இவர் துறவு பூண்டு தனியே இருந்து வந்தார். முத்தமிழிலும் இவருக்குள்ள அறிவு ஆற்றல் மிகப் பெருமை என்பதற்கு, இவரியற்றிய சிலப்பதிகாரமே சான்றாகும். கண்ணகியின் வரலாற்றை இவர் மலை நாட்டுக் குறவர் வாயிலாகவும், மாடலன் என்னும் மறையவன் வாயிலாகவும் அறிந்து கொண்டார். ஒரு நாள் இவர் தம் தமையனாகிய செங்குட்டுவனோடு பேரியாற்றங் கரையில் அமர்ந்து இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார். மலைநாட்டுக் குறவர்கள் தாங்கள், ஒரு கற்பு மங்கையை வேங்கை மரத்தின் கீழ்த் தங்கியிருந்த, தையும், பின்னர் ஒரு விமானம் வந்து அவளை அழைத்துச் சென்றதையும் கண்டதாக, மன்னனிடம் கூற, இளங்கோ வடிகள் உடன் அமர்ந்திருந்த சாத்தனார், அம்மங்கை கண்ணகியே என்றும், அவள் கற்பின் பெருமையை இலக்கிய வாயிலாக நிலைநாட்ட இளங்கோவடிகள் முயலல் வேண்டும் எனவும் வற்புறுத்தவே, இளங்கோ வடிகளும், கண்ணகியின் சிலம்பு காரணமாக வந்த கதை யாதலின் அதன் பெயராலேயே சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காப்பியம் செய்தார். இளங்கோவடிகளின் செம்மை சான்ற மனப்பான்மை சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்குகிறது. காவியத்தின் இறுதியில் பரிவும் இடுக் கணும் பாங்குற நீங்குமின்' என்று தொடங்கி, :செல்லும்