பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

747 தே எத்துக்கு உறுதுணை தேடுமின்' " என்று முடிக்கும் செய்யுள் அருள் நிறைந்த அவருள்ளத்தைப் புலப்படுத்து கிறது. இவருடைய காலத்தைக் குறித்தும், சமயத்தைக் குறித்தும் கருத்து வேறுபாடு உண்டு. 4. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் : சங்க காலப் புலவர்; அந்தணர். சேரமான் அந்துவஞ்சேரல் இரும் பொறையால் ஆதரிக்கப் பெற்றவர். ஆய் என்னும் வள்ளலின் கொடைச் சிறப்பும் வீரச் சிறப்பும் இவராற் பல வாறு பாராட்டப் பெற்றுள்ளன. அதனால், திருந்து மொழிமோசி பாடிய ஆய்' எனப் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் இவரைப் பாராட்டியுள்ளார். இவர் பெயர் மோசி, ஏணிச்சேரி முடமோசியார் எனவும் வழங்கும். இவராற் பாடப் பெற்றோர் சோழன் முடித். தலை கோப்பெருநற்கிள்ளியும், ஆயும் ஆவர். இவர் பாடி யவை: புறம் 13, 127, 135, 241, 374, 375. 5. ஓரம்போகியார்: சங்க காலப் புலவர். இவர் பாடலில் வந்துள்ள ஊர்கள் ஆமூர், இருப்பை, கழார், தேனுார் என்பவை. ஐங்குறுநூற்றில் முதல் நூறாகிய மருதத் திணையைப் பாடியுள்ளார். இவையேயன்றி இவர் பாடிய பாடல்கள் 10. (குறுந் . 10, 70, 122, 127, 384; நற்-20, 360; அகம்-286, 316; புறம்.284). 6. ஒளவையார் : சங்க காலப் புலவர். இவர் அஞ்சி அதியமான்பாற் பேரன்புடையவர். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் துரதாகச் சென்றவர். அவனளித்த நெல்லிக்கனியை உண்டு அதன் பெருமையை உணர்ந்ததும் அதியனை, பால் பிறை பிறைநுதற் பொலிந்த சென்னி, நீல மணிமிடற்றொருவன் போல் நெடிது வாழ்க" என வாழ்த்துகின்றார். பல பாடல்களில் அதியனின் வீரச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் பாராட்டிக் கூறு கிறார். இவர் பரணர் என்னும் சங்கப் புலவரின் காலத்தில்