பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 வாழ்ந்தவர் என்பது இவர் அதியனைப் பற்றிப் பாடும் 99.வது (புறம்) பாடலால் தெரிய வருகிறது. ஒரு போர்க்களத்தில் அதியமான் பொருது புண்பட்டு நின்ற காட்சியைப் புலவர் வீரச்சுவை தோன்றப் பாடுகிறார். அதே போன்று பகைவன் எறிந்த வேல்பட்டு அதியமான் போரில் மாண்டபோது ஒளவையார் பாடிய கையறுநிலைப் பாட்டுகள் உள்ளத்தை உ ரு க் கு ம் தன்மையன. அவனுடைய மார்பில் பட்ட வேல், பாணர் களின் மண்டையில் துளை செய்து உருவி, இரப்பவர்களின் கையுள் புகுந்து சென்று, அவனால் காக்கப்படுவோரின் கண்களின் பாவை சோரப் பாய்ந்து, பாடும் புலவரின் நாவில் தைத்தது என்றும், இனிப்பாடுவாரும் பாடுவார்க்கு ஈவாரும் இல்லை என்றும் உள்ளம் நைந்து உருகினார். அதியமான் மகன் பொருட்டெழினியும் தந்தையைப் போலவே சிறந்த வீரனாக விளங்கி ஒளவையார் பாட்டுக் குரியவனானான். இவர் பாடியனவாக நற்றிணையில் 7, குறுந்தொகையில் 15, அகத்தில் 4, புறத்தில் 30, திருவள்ளுவ மாலையில் 1 ஆக 60 பாடல்கள் உள்ளன. 7. கபிலர்: இவர் அந்தணர். வேள் பாரியின் நண்பர். அவன் இறந்த பிறகு அவன் மகளிரை அழைத்துச் சென்று மணம் செய்து கொள்ளும்படி, விச்சிக்கோன், இருங்கோ வேள் என்பவர்களை வேண்டி, அவர்கள் மறுத்தமையால் வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்ப் படுத்துத் தம் கடனைக் கழித்தனர். இவர் ஐங்குறு நூற்றில் குறிஞ் சியைப் பொருளாகவுடைய மூன்றாம் நூறையியற்றினார்; பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் நூறாயிரம் காணமும், நன்றா என்னும் குன்றின் மீதேறிக் கண்ணால் கண்ட இடங் களையும் பரிசிலாகப் பெற்றார் என்று பதிகம் கூறுகிறது. பாரியின் பிரிவுக்குக் கண்ணிர் விட்டுக் கையறு நிலை யாகப் பாடும் பாடல் நெஞ்சை உருக்குவதாகும்.