பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/743

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

749 இவரருளிச் செய்தனவாக 278 பாடல்கள் இப்போது உள்ளன. அவற்றுள் அகவற்பாக்கள் 207. (நற்-20; குறுந்-29; ஐங்-100; பதிற்.10; அகம்-16; புறம்-30: குறிஞ்சி-1; வெண்பா.42; திருவள்ளுவமாலை-1, இன்னா ந ா ற் ப தி லு ள் ள பாடல்-41), கலித்தொகையிலுள்ள கலிப்பா-29. 8. காக்கை பாடினியார் நச்செள்ளையார்: இவர் பெண்பாலார். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்னும் அரசன் மீது பதிற்றுப் பத்துள் ஆறாம் பத்தைப் பாடினார். இதற்காக அவர் ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பெற்றார் எனப் பதிகம் பகருகிறது. காக்கை கரைந்தமையைப் பற்றிப் பாராட்டிக் கூறிய அருமை பற்றிக் காக்கை பாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் ஆன்றோரால் இவர் பெற்றனர் எனத் தெரிகிறது. இவர் பாடியவை பதிற்றுப்பத்து 51-60; குறுந்-210; புறம்-278. 9. காப்பியாற்றுக் காப்பியனார்: சங்ககாலப் புலவர். இவர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றிப் பதிற்றுப்பத்துள் நான்காம் பத்திற் பாடியவராவர். இவர் அவ்வரசனிடம் பரிசிலாக நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதில் ஒரு பாகமும் பெற்றார் என்பது பதிகம் கூறும் செய்தி. இவர் பாடலுள் முதற்கண் திருமால். வணக்கம் கூறப்பட்டுள்ளது. 10. குமட்டுர்க் கண்ணனார். இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தைப் பாடியுள்ளார். இதற்கு உம்பற்காட்டு 500 ஊர் பிரமதாயமும், 38 வருடம் தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பரிசிலாகப் பெற்றவர் எனப் பதிகத்தால் அறியலாம். இவர் அந்தண குலத்தினர். 11. குண்டுகட்பாலியாதன்: இவருக்கு இப்பெயர் சினையாலும் இடத்தாலும் வந்தது; பகைவர் தருந் ,