பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75] (6) எல்லா வகையாலும் உன் நாடு தேவருலகம் போல்வது" . இவர் பாடியுள்ளவை: புறம்-17, 20, 22 என்பன. 13. கூடலூர் கிழார்: இவர் மலைநாட்டின் கண்ண தாகிய கூடலூரை இருப்பிடமாக உடையவர்; வேளாண் மரபினர்; இவருடைய பாடல்கள் இன்சுவையைத் தருபவை; ஒரு விண்மீன் வீழ்ச்சியைக் கண்டு கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை என்னும் அரசன் இன்ன நாளில் இறப்பா னென்று முதலில் நிச்சயித்திருந்து அவ்வாறே அவன் இறந்தது கண்டு ஒருவாற்றானும் பிரிவாற்றாது வருந்தினாரென்று, ஆடியலழற் குட்டத்து' என்னும் பாடலாலும் அதன் பின்னுள்ள வாக்கியங்களாலும் தெரிதலால், இவர் கணிதத்தில் வல்லவராகக் கருதப் படுகிறார். இவர் மேற்கூறிய அரசனால் மிக ஆதரிக்கப் பெற்றவர். அவன் வேண்டுகோளால் ஐங்குறுநூறென்னும் தொகை நூலைத் தொகுத்தவர் இவரே. இவர் காலத்துப் புலவர்கள் குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங் ரேனார் என்பவர்கள். முதுமொழிக் காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் வேறு; இவர் வேறு. இவரியற்றிய பாடல்கள்-4; குறுந்-3; புறநானூறு-1. 14. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். இவர் வஞ்சப் புகழ்ச்சியணியைப் பாடல்களில் அமைப்பதில் வல்லவர்; திருவள்ளுவமாலையில் இவர் பெயரோடு ஒரு பாடல் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோர்: சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கள்ளி, ஈர்ந்துர்கிழான் தோயன்மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்,