பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 சோழிய ஏனாதி திருக்குட்டுவனென்போர். இவர் பாடியன புறம்-54, 61, 167, 180, 197, 394, 15. திருத்தாமனார்: சங்க காலத்தைச் சேர்ந்த வர். இவராற் பாடப்பட்டோன் சேரமான் வஞ்சன். சேர மானது கொடைத் தன்மையை நன்கு பாடிச் சிறப்பிக் கிறார். புறம்-398 என்ற ஒரு பாடலே இவராற் பாடப் பட்டவை. 16. நக்கீரர்: இவர் மதுரைக் &5 6N5OT 5.5 Tr u j a NorfTri. மகனார் நக்கீரர் என்று வழங்கப்படுவார். இறையனாரகப் பொருளுக்கு உரை செய்தவரிவரே என்றும், திருமுருகாற்றுப் படை, நெடுநல் வாடை இவ்விரண்டையும் இவரே இயற்றியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. }வர் பாடிய நெடுநல் வாடை பத்துப் பாட்டினுள் 7-வது, 188 அடிகளையுடையது. பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்துந் தலைவிக்கு அவ். வருத்தந் தீரும்படி அவன் பகையை வென்று விரைவில் வருவானாக என்று கொற்றவையைப் பரவுவாள் கூற்றாக அவனை நக்கீரர் பாடியது. இவர் வடமொழியில் நல்ல பயிற்சியுடையவர். இவர் பெயருக்கு முன்னே உள்ள அடையால் இவரது ஊர் மதுரையென்றும், இவருடைய தந்தையார் ஒரு கணக்காயர் என்றும் தெரிகின்றது. இவரது பாடல்களாக நற்றிணையில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் எட்டும், அகநானுாற்றில் பதினேழும், திருவள்ளுவ மாலையில் ஒன்றும், வேறு சில தனிப்பாடல் களும் உள்ளன. அகம் - 36, 57, 78, 80, 93, 120, 126, 141, 200, 205, 227, 249, 253, 290, 3 10, 340,346, 369, 389. குறுந்தொகை - 78, 105, 131, 143, 161, 266, 280, 368. நற்றிணை: 31, 86, 197, 258, 340, 358, 367. புறம்: 56, 189, 395. திருவள்ளுவ மாலை : 7-வது பாடல்.