பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

753 17. நரிவெரூஉத் தலையார்: சங்க காலப்புலவர். முவா யாது காரணத்தாலோ தம்முடம்பு வேறுபட்டிருந்து சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரவிரும் றையைக் கண்ட நாளில் அவ்வேறுபாடு நீங்கித் ויוו(") தம்முடம்பு பெற்றனர். இதனைப் புறநானூற்றின் 5ஆம் பாட்டின் பின்புள்ள வாக்கியத்தாலும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலின் புதுமை பெருமை என்னும் 7-ஆம் நாற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையாலு முணரலாம். இவர் பாடியன குறுந்-5, 256; புறம் - 5.195. இன்பம் பொருளறம்' என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகிறது. 18. பரணர்: இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடிக் கடல் பிறக்கோட்டிய கோச்செங்குட்டுவனிடம் உம்பற்காட்டுவாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றனர். இவராற் பாடப் பட்டோர்: சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன என்பார். மாலுங் குறளாய்" என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகிறது. இவர் பாடியன அகம் : 6, 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 357, 372, 376, 386 396, குறுந்தொகை: 19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 292, 298, 328, 393, 399. நற்றிணை: 6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356. பதிற்றுப்பத்து-41.50. புறம்-4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369. சே. செ. இ-48