பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 பன்னிரு பாட்டியலின் பகுதி இவர் செய்ததாகவும் வழங்கும். கபில, பரண, நக்கீரர் என்று கூறப்படுவதால் இம்மூவரும் சமகாலத்தவராக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. 19. பாலைக் கெளதமனார்: பல்யானைச் செல்கெழு குட்டுவன் மீது மூன்றாம் பத்தைப் பாடியவராகிய இவர் அவனை இரந்து அவனுதவியால் ஒன்பது பெருவேள்வி வேட்கையில் மனைவியுடன் சுவர்க்கம் பெற்றதாகப் பதிகம் கூறுகிறது. இவர் பாடியது பதிற்றுப்பத்து-21-30. 20. பெருங்குன்றுார் கிழார்: இவர் குடக்கோ இளஞ் சேரல் இரும்பொறையென்னும் சேரவரசன்மீது பாடிய பத்துப்பாடல்கள் பதிற்றுப் பத்தில் ஒன்பதாம் பத்தாக இடம் பெற்றுள்ளன. இதற்காகப் பொற்காசு முதலிய பல பரிசில்களைப் பெற்றவர் எனப் பதிகம் கூறுகிறது. வேளாளர்; கடைச் சங்கமிருந்து தமிழாய்ந்தோருள் ஒருவர்; இவராற் பாடப்பட்டோர்கள் மேற்கூறிய தலைவர்கள் இருவரும், உருவப்ப ஃறேரிளஞ்சேட் சென்னி யும் ஆவர். இவர் காலத்துப் புலவர்கள் இறையனாரகப் பொருளுரையால் தெரிகின்ற சிறு மேதாவியார், சேந்தம் பூ த னா ர், அறிவுடைவிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலியோர்களும், வையாவிக்கோப் பெரும் பேகனைப் பாடிய பரணர் முதலியோர்களும் ஆவர். இவர் இயற்றியனவாக எட்டுத் தொகையில் 21 செய்யுட்கள் கிடைக்கின்றன. நற்றிணை-4, கு று ந் .ெ த ா ைக-1, பதிற்றுப்பத்து-10. அகநானூறு-1, புறநானூறு-5; இவற்றுள் அகத்திணைக்குரியன 6, புறத்திணைக்குரியன 15. 21. பொருந்தில் இளங்கீரனார்: செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் எனக் கபிலருடைய கல்வி கேள்விகளை இவர் புகழ்ந்திருத்த லால் இவருடைய நற்குணம் வெளியாகிறது. இவராற்.