பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/749

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

755 பாடப்பெற்றோன் சேரமான் மாந்தரஞ் சேரலிரும் பொறை. 22. பொய்கையார்: இவருடைய ஊர் மலைநாட்டி லுள்ள தொண்டியென்பது. இவராற் பாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன்; சேரமான் கணைக் காலிரும் பொறையின் அவைக் களத்துப் புலவராக விளங்கியவர். இவர் மூவன் என்பவனை அச்சேரமான் வென்று அவனது பல்லைப் பிடுங்கித் தன்னுடைய தொண்டி நகரத்துக் கோட்டை வாயிற் கதவிலே அழுத்தி வைத்த செய்தி இவர் பாடலில் வந்துள்ளது (நற்: 18). அச் சேரமானைப் போரில் சோழன் செங்கணான் வென்று சிறையில் வைத்துவிட்டபோது சோழன்மீது களவழி நாற்பது என்னும் நூலைப் பாடினார் என்பர். இவரே பொய்கையாழ்வாரென்பது சிலருடைய கொள்கை; ஆனால் இவர் வேறு அவர் வேறு என்று கொள்வதே மரபு. இவர் பாடியனவாக யாப்பருங்கல விருத்தியிற் சில வெண்பாக்களும், பன்னிரு பாட்டியலிற் சில சூத்திரங்களும் காணப்படுகின்றன. 23. பேய்மகள் இளவெயினி: பேயினது ஆவேசமுற்ற வள் எனப்படும். இந்த வகையார் இக்காலத்தும் அங் கங்கே உள்ளனர். இப்பாட்டின் விசேடவுரையால், பேயே ஒரு மகள் வடிவங் கொண்டு பாடினாளென்று புறநானுாற் றின் பழைய உரைகாரர் கருதியதாகத் தெரிகிறது. எயினி என்பதால் எயினக் குலத்திற் பிறந்த மங்கை எனக் கொள்ளல் வேண்டும். வஞ்சி நகரின் வளமும் தலைவன் கொடையும் இவர் பாடலிற் கூறப் பெற்றுள்ளன. இவராற் பாடப்பெற்றோன் சேரமான் பாலை பாடிய பெருங் கடுங்கோ. 24. மாமூலனார்: கி.மு. 245 இவரது காலம் எனக்கூறப் படுகிறது. இவர் முக்காலமுமுணர்ந்தவரென நச்சினார்க் கினியர் கூறுவர். யோகிகளாய் உபாயங்களால் முக்கால