பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 முமுணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலை வகையோராவார் (ந-உரை) யாப்பருங்கல விருத் தியிலும் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளது. இவர் மோரியர் படையெடுப்பைப் பற்றியும், நந்தரென்பார் வடநாட்டில் பாடலிபுரத்தில் கங்கை நீருள் தமது செல்வத்தை மறைத்து வைத்ததைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இவர் பாடியன அகம்-1, 15, 31, 55, 61, 65, 91, 101, 115, 127, 187, 197, 201, 211, 223, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359. குறுந்-61, நற்-14, 75. அறம் பொருள் இன்பம்' என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகிறது. 25. முரஞ்சியூர் முடிநாகராயர்: சங்கப்புலவர். இறை யனாரகப் பொருளுரை இவரைத் தலைச்சங்கப் புலவருள் ஒருவராகக் கூறுகின்றது. இவர் பாரதப் போரில் பெருஞ் சோறு வழங்கிய உதியஞ் சேரலாதனைத் தம் பாடலில் (புறம்-2) குறிப்பிட்டுள்ளார். அவ்வரசன் பாரதப்போரில் பெருஞ் சோறு வழங்கவில்லை; அவன் தனது முன்னோ ரான பாண்டவரை நினைந்து அவர் பொருட்டுச் செய்த திவசத்தில் பெருஞ்சோறு வழங்கினான் எனச் சிலர் கருதுவர். பாரதப்போர் கி.மு. 13 ஆம் நூற்றாண் டளவில் நிகழ்ந்தது. இவர் பாடியது புறம்-2. 26. மோசிகீரனார்: சங்க காலத்தவர். இவர் அதிய மானை வென்ற சேரவிரும்பொறையைப் பாடியுள்ளார். சேரமானது அரசமுரசு வைத்திருந்த கட்டிலில் அப்புலவர் அறியாது துயின்றதைக் கண்டு சேரமான் அவருக்குத் துன்பஞ் செய்யாது அவர் தூங்கி எழுந்திருக்கும் வரை கவரி கொண்டு வீசியதாக இவர் பாடிய புறம் 50-ல் அறியக் கிடக்கிறது. :ஆண்பாலேழாறிரண்டு என்னும் திரு வள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாக் காணப் படுகின்றது. இவர் பாடியன: அகம்-392 குறுந்-59, 84; நற்.342; புறம்-50, 154, 155, 156, 186. -