பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/752

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

759 11. சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் : சேர மரபினருள் இவனே பழமையானவன் என்பர். நற்றிணைப் பாடல் ஒன்றில் இளங்கீரனாரும் அகநானூற்றுப் பாடல் இரண்டில் 3 மாமூலனாரும் புறநானுாற்றுப் பாடல் ஒன்றில் ! முரஞ்சியூர் முடிநாகராயரும் இவனைப் பாடியுள்ளனர். 12. சேரமான் வஞ்சன் : பாயல் மலைக்கு உரிய வனாகவும், பாடி வந்த பரிசிலர்க்குப் பகிர்ந்தளித்த புரவலனாகவும் இவ்வேந்தன் திருத்தாமனார் என்னும் புலவரால் பாராட்டப் பட்டுள்ளான். . == 13. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் : .ெ ந டு ஞ் சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை என்னும் பெருந்தே வியிடம் பிறந்தவன். களம் பல கண்ட காவலன். பரணர் அகப்பாடல் ஒன்றிலும் புறப் பாடல் ஒன்றிலும் இவனைப் புகழ்ந்துள்ளார். 14. பெருஞ்சேரல் இரும்பொறை : க. வ ரி வி சி ய காவலன் இவன். புலவர் மோசிகீரனார் இவனைக் காண ஒருஞான்று வந்தபோது அரசமுரசம் வைக்கப் பெறும் கட்டிலில் சோர்வால் உறங்கிவிட்டார். அதுபோது ஆண்டு வந்த இவ்வரசன் அவர்க்குத் தீங்கிழைக்காமல் அவர் துயிலெழும் வரையிலும் கவரி கொண்டு வீசி நின்றான்’’. இதனால் இவன் புலவர்மாட்டுக் கொண்ட பற்றும் தமிழன்பும் விளங்கும். 15. யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல்இரும்பொறை : வீரமும், கொடையும் ஒருங்கே கொண்டிருந்த இவன் 12. 1 13. 13. 65, 235. 14. 2. 15. புறம்; 398. 16. 212, 17. புறம்: 50.