பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/753

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 தொண்டியிலிருந்து அரசாண்டான். ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தான். கபிலரிடம் பெருமதிப்பு வைத்திருந் தான். இவனைப் பாடிய புலவர்கள் குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர் கிழார் 29 ஆகிய மூவரும் ஆவர். 111 பாடல்கள் பாடிய சேரவேந்தர் 1. சேரமான் இளங்குட்டுவன்: பாலைத்திணை அமைய அகநானுாற்றில் இவர் ஒரு பாடல்? பாடியுள்ளார். அப்பாட் டுத் தவிர வேறொரு பாட்டையும் இவர் பாடியதாகத் தெரியவில்லை. மகட்போக்கிய செவிலித்தாயின் கூற்றாக அமைந்துள்ள இப்பாடலில் பாலைவழியின் அருமையும் தலைவி நெஞ்சின் காதலும் ஒருங்கே புலப்படுகின்றன. 2. சேரமான் எ ங் ைத : குறுந்தொகையில் ஒரு பாடலைப் பாடி உள்ளார். தலைமகனது செலவுக்குறிப் பறிந்து நெஞ்சாற்றமாட்டாத தலைவியைத் தோழி ஆற்றுவிக்கும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. 3. சேரமான் கணைக்கால் இரும்பொறை : இவன் பாடிய பாட்டு ஒன்றேயாம்; அது புறநானூற்றில் 2 இடம் பெற்றுள்ளது. இவருடைய மான உணர்வும் கவிதைச் சிறப்பும் இப்பாட்டில் விளங்குகின்றன. 4. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை : கோட்டம்பலம் என்ற இடத்தில் இவர் இறந்தவர் என்பது 18. புறம்; 17, 20. 22. 19. புறம்; 53. 20. புறம்; 269. 21. 153. 22. 22. 23. 74. o- . . . . . . .