பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

761 பெயராலேயே விளங்கும். தன் கோப்பெருந்தேவி இறந்த போது அவளை ஈமத்தீயில் ஏற்றிய நிலையில் இம்மன்னன் பாடியுள்ள பாட்டு அவலச்சுவை ததும்பி உருக்கம் நிரம்பிய தாகும். தன் துணைவி இறக்கவும் யான் இன்னமும் உயிர் வாழ்கின்றேனே என்று இவன் புலம்பிய சொல், இவன் தன் காதல் மனையாள்மாட்டுக் கொண்டிருந்த ஆழமான அன்பினைப் புலப்படுத்தும். -- 5. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ: பாடல் பெற்றவரும் பாடியவருமான சேரவேந்தர் இவர் ஒருவரே. சேரவேந்தரில் பெரும்புலவராக விளங்கிய இவரைப் பேய் மகள் இளவெயினி எனும் பெண்பாற் புலவர் பாடியுள்ளார். எல்லாரையும்விடப் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடுதலால் பாலைபாடிய என்னும் அடையுடன் இவர் பெயர் சேர்ந்து வழங்கப்பட்டது. பிரிவின் துன்பத்தினை உருக்கத்தோடு விவரிப்பனவாக இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. இவர் இயற்றியனவாக நற்றிணையில் பத்தும், குறுந்தொகையில் பத்தும், அகநானுாற்றில் பன்னிரண்டும்,28 கலித்தொகையில் முப்பத்தாறும், புற நானுாற்றில் ஒன்றும், ஆக அறுபத்தெட்டுப் பாடல்கள் காணப்படுகின்றன. இவருடைய கவிதைச் சிறப்பு ஒவ்வொரு பாடலிலும் ஒளிவிடுகின்றது. அரிய நுட்பமான அகப்பொருட் கருத்துகள் இவர் பாடல்களில் துலங்கு கின்றன. 24. நற்றினை-9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 394. 25. 16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398. 26. 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379. . 27. பாலைக்கலி-1-36. f . . . . 28. 282. . . . . . . .