பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/756

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

763 போரில் சிறந்தவன். இவன் முன்னோர், தேவர்களை வழி பட்டு விண்ணுலகத்திலிருந்து கரும்பை இவ்வுலகத்திற்குக் கொணர்ந்தவரென்றும், இவர்க்கு வரம் கொடுப்பதற். கென்று தேவர்கள் வந்து தங்குவதோர் சோலை இவன் தலைநகரில் இருந்ததென்றும் கூறப்படுகின்றன. மழவர்' என்ற ஒருவகை வீரர்படை இவனுக்கு இருந்தது. தன்னை உண்பவர்க்கு நெடுங்காலம் உயிர் வாழ்வு அளிக்கும் அரு நெல்லிப்பழத்தைப் பெற்று அதனை ஒளவையார்க்குக் கொடுத்துப் பெரும்புகழ் பெற்றவன். பொகுட்டெழினி என்பவன் இவனுடைய வீரமகன். குதிரை மலை இவனது மலையாகும். புறத்திரட்டுப் பாடல்களாலும், பிற்காலத்து இவன் மரபினர் தம்மை வஞ்சியர் குலபதி எழினி எனவும், சேரவமிசத்து அதியமான் எழினி’ எனவும் கூறிக் கொள் வதனாலும், பனந்தார் இவர்க்கு மாலையாதலாலும், புறநானூற்றுரைகாரர் குறிப்பாலும் இவ்வதியமான் சேர மரபினனே என்றும், நாட்டின் பிரிவு பற்றிய தாயவழக்கே சேரமானுக்கும் இவனுக்கும் போர் புரியக் காரணமாயிற் றென்றும் அறியலாம். இவனைப் பற்றி ஒளவையார் நற்றிணையில்: ஒரு பாட்டிலும், குறுந்தொகையில் ஒரு பாட்டிலும், புறநானூற்றில் இருபத்திரண்டு பாடல்: களிலும் புகழ்ந்து பாடியுள்ளார். அஞ்சியத்தை மகள் நாகையார் , மாமூலனார் 8 ஆகியோர் முறையே ஒவ்: வொரு பாட்டுப் பாடியுள்ளனர். அரிசில்கிழார் ஒரு பாட்டும் பெருஞ்சித்திரனார் 8 பாட்டொன்றும் இவனைப் பற்றிப் பாடியனவாகப் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. 32. 381. 33. 91. o 1 * 34. 81-95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 340. o - i. 35. அகம்.352. 36. அகம்.325. 37. 230. . . - * : *** -