பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/757

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 2. அதியமான் நெடுமான் அஞ்சிமகன் பொகுட்டெழினி: பெயரோடு சேர்ந்துள்ள அடையாலே இவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் என்பது விளங்கும் . தந்தையைப் போலவே வீரனும் வள்ளலுமாக விளங்கி யவன். இவனைப் பற்றி ஒளவையார் குறுந்தொகையில்" ஒரு பாட்டிலும், புறநானூற்றில்' மூன்று பாட்டுகளிலும், தாயங்கண்ணனார் என்னும் புலவர் அகநானுாற்றுப்' பாட்டு ஒன்றிலும் பாடியுள்ளனர். பல்வேல் எழினி எனப் பட்டவனும் இவனாக இ ரு க் க ல ா ம் என்பர் மு. இராகவையங்கார் அவர்கள்." 3. ஆட்டன் அத்தி : இவ்வத்தியை வஞ்சிக்கோன்' என்று இளங்கோவடிகள் கூறுதலால் சேரர் மரபினன் இவன் என்பது அறியப்படும். இவன் ஆட்டத்தில் வல்லவன். சோழன் கரிகாலன் மகள் ஆதிமந்தியார் என்பவளை மணந்தவன். இவனை ஒரு சமயம் காவிரி வெள்ளம் கவர்ந்து கொள்ளவும், ஆதிமந்தி அத்தியைத் தேடிக் கடற்கரை வரை அரற்றிச் செல்லவும், அப்போது கடல் தன் அலைக்கரங்களால் ஆட்டனத்தியை ஏந்திக் கொண்டுவர, ஆதிமந்தியின் துயரை அறிந்து அங்கே நீராடி வந்த மருதி என்பாள் அவனைக் கரை சேர்க்கவும், அவளைக் கடல் அலை இழுத்துச் சென்றதாகவும் கூறப்படு கின்றது. இவனைப் பற்றி ஆதிமந்தியார்' பாடிய பாடல் ஒன்றும் பரணர் பாடிய பாடல் ஆறும், வெள்ளிவீதியார்' 39. 80. * 40. 96, 102, 392. 41. 105. - - =- ** .42. சேரவேந்தர் செய்யுட்கோவை, முன்னுரை பக்கம் 23. ** " . 43. குறுந்: 31. - 44. அகம்; 76, 135, 222, 236, 276, 376. - , , 45. அகம்; 45. , - ...

  • . .

i. -