பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/758

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

765 பாடல் ஒன்றும் ஆக எட்டுப் பாடல்கள் இருக்கின்றன.

  • அடிகளும் இவனைப் பற்றிக் குறிப்பிட். Этот тГГ.

4. கண்ணெழினி : எழினி என்ற பெயரினின்றும் அதியமான் மரபினனாக இவன் கருதப்படுகின்றான். இவன் ஒரு பெரு வீரன் என்பதும் நடு நாட்டிலுள்ள முதுகுன்றம் (விருத்தாசலம்) இவனுக்குரிய மலை என்பதும் இவனைப் பாடியுள்ள மாமூலனார்47 பாடலினின்றும் அறியப்படும். செய்திகளாகும். 5. வாட்டாற்று எழினியாதன் : வாட்டாறு என்பது --- தென்திருவாங்கூர் ச் சீமையிலுள்ள திருவாட்டாறு என்ற திருமால் தலமாகும். இவ்வூரில் இருந்தாண்ட சிற்றரசனான இவன் வேள் என்றும் சிறப்பிக்கப்படுவன். எழினி என்ற அடைமொழியால் அதியமான் மரபினன் இவன் என்பதும், ஆதன் எனச் சேரர் பூண்டுவந்த பெயரால் சேரர் கிளை யினன் என்பதும் தெரியவருகின்றன. இவன் நாட்டின் வளத்தையும் இவனது கொடைச்சிறப்பையும் பாடியவர் மாங்குடிகிழார்' என்ற புலவர். 6. வானவன் மறவன் பிட்டன் : இவன் குதிரை மலைக்குத் தலைவன். வீரத்தாலும் கொடையாலும் மேம்பட்டு விளங்கியவன். :வானவன் மறவன்' என்று இவன் சிறப்பிக்கப்படுவதால் சேரமானின் படைத்தலைவன் இவன் என்பது விளங்கும். இவனைப் பற்றிப் புலவர்கள் ஆலம்பேரி சாத்தனார்', மருதன் இளநாகனார்க9. முறையே ஒவ்வொரு பாடல் பாடியுள்ளனர். 46. சிலம்பு; 21 : 1.1.15. 47. அகம்; 197. 48. புறம்; 396. 49. அகம்; 143. 50. அகம்; 77.