பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 7. வானவன் : வானவன் என்ற இவனுடைய பெய ரால் இவன் சேரமரபினன் என்பது விளங்குகின்றது. இவனைப் பற்றிக் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்' ஒரு பாட்டும் மதுரை இளங்கெளசிகனார்” ஒரு பாட்டும் மாறோக்கத்து நப்பசலையார் ஒரு பாட்டும் பாடி யுள்ளனர். இவன் போரில் வல்லவன் என்பதும் குதிரைப் படை வைத்திருந்தான் என்பதும் பகைவர் எயிலை அழித்தவன் என்பதும் கடற்படையை வைத்திருந்தான் என்பதும் உணர்த்தப்படும் செய்திகளாம். 8. வானவரம்பன் : இவனைப் பற்றி நக்கீரர் அக நானுாற்றுப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகின்றார். போரில் சிறந்து விளங்கும் புகழினன் என்பது அவர் உணர்த்தும் செய்தியாகும். o V. சேர நாட்டுப் பகுதிகளை ஆண்ட வேற்றரசர்கள் 1. வேள் ஆய் : இவன் ஆய் அண்டிரன் என்றும் வழங்கப்படுவான்; வேளிர் மரபினன்; கடையெழு வள்ளல் களுள் ஒருவன். பொதியில், கவிரம் என்ற மலைகளும், ஆய்குடி, தலையாறு என்ற ஊர்களும் இவன் நாட்டில் உள்ளவை. இவ்வேளிர் தலைவன் வீரப் பெருமை வாய்ந் தவன். இவன் வள்ளன்மை மிக்கவன். இவன் வள்ளன் மையைப் புகழ்ந்து சங்கத்துச் சான்றோர் பலர் பாடி யுள்ளனர். ஒருகால், நீல நாகமொன்று தனக்கு அளித்த அரிய ஆடையொன்றை, இவ்வேள் ஆய் சிவபிரானுக்குச் சாத்தி மகிழ்ந்தான். அண்டிரன் இவனுடைய இயற் = 51. அகம்; 309. 52. அகம்: 381. 53. புறம்; 126.