பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இனிச் சங்ககாலச் சேர மன்னர் தம் அரசியல் அமைப்பு முறையினை விளங்கக் காண்போம். சேர மன்னர்களில் மிகப் பழமை வாய்ந்தவனாகக் கருதப்படுபவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆவன். இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவன். இப்பேரரசன் உதியஞ்சேரலின் மைந்தன் ஆவன். இவ்வுண்மையை மறுத்து மொழிவாரும் உண்டு. இந்நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே சேரவேந்தர் மக்கட்தாயிகளா? மருமக்கட் தாயிகளா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. திரு. எம். சீனிவாச ஐயங்கார் Tamil Studies' என்னும் தம்முடைய நூலில் சேரவேந்தர் மருமக்கட் தாயிகளே என்னும் கொள்கையை வலியுறுத்தியுள்ளார். இதன் பின்னர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் :சேரர் தாயமுறை என்று தாம் வரைந்த கட்டுரையில் * மருமக்கட்டாயமே சேரர்க்குப் பழைமையாக உரியது: என்று காரணங்கள் பலவற்றைக் காட்டியுள்ளார். இக் கூற்றினை ஏதுக்கள் பலவற்றை எடுத்துக்காட்டித் தாம் எழுதிய சேரவேந்தர் தாய வழக்கு' என்னும் கட்டுரையில் (ஆராய்ச்சித் தொகுதி - ப. 339-398) பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் சேரர், சோழ பாண்டியர் போன்று மக்கட்தாயிகளே என்று நிலைநாட்டியுள்ளார்.8 கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் திரு. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் பதிற்றுப்பத்தும் பதிகங்களும்’ என்னும் தம் ஆராய்ச்சிக் கட்டுரையில் இச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கண்டுள்ளார். அவர் ஆராய்ச்சி வருமாறு: 5. M. Srinivasa Aiyangar; Tamil Studies. 6. மு. இராகவையங்கார், ஆராய்ச்சித் தொகுதி, ப. 339ட398. 7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் - இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், ப. 143 & 144.