பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/760

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

767 பெயர் என்ப. இவனைப் பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பன்னிரண்டு பாடல்களில் பாடியுள்ளார். குட்டுவன் கீரன் ஒரு பாடலும், உறையூர் ஒடை கிழார் ஒரு பாடலும் பாடியுள்ளனர். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரும் 1, மோசிகீரனாரும் ஒவ்வொரு பாட்டில் குறிப்பிடுகின்றனர். பரணர் நற்றிணைப் பாடல் ஒன்றிலும், அகப்பாடல் 89 இரண்டிலும், உமட்டுர் கிழார் மகனார் பெருங்கொற்றனார் 31 ஒரு பாடலிலும் இவனைப் பற்றிச் சொல்லுகின்றனர். சிறுபாணாற்றுப் படையில்" இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் இவனைப் பற்றிப் பாடியுள்ளார். 2. காஞ்சில் வள்ளுவன் இவன் நாஞ்சில் என்ற மலைக்குரிய தலைவன்; நாஞ்சிற் பொருநன் என்றும் இவனை வழங்குவர். தென்னவர் வயமறவன் எனக் கூறப்படுதலால், பாண்டியர்க்கும் படைத் தலைமை பூண்டவன் இவன் என்று தெரிய வருகின்றது. பரிசிலர்க்கு வேண்டியவற்றை அளித்துவந்த பண்பாளன் இவன். இந்நாஞ்சில் வள்ளுவனுடைய தலைவனான அரசனைச் சேரனாகப் புறநானுாற்றுரைகாரர் குறிப்பிட்டனராயினும் அதற்கு மூல மேற்கோள் காணப்படவில்லை என்பர், மு. இராகவையங்கார் . இவனைப்பற்றி ஒரு சிறைப் 54. புறம்.127-135, 374, 375, 241. --- 55. புறம்-240. 56. புறம்-136. 57. நற்-237. 58. குறுந்-84. 59. , , 167. 60. ,, 152, 198. 61. அகம்.69. 62. வரிகள்.96.99. 63. சேரவேந்தர் செய்யுட் கோவை; முன்னுரை பக்கம்.25.