பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/761

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 பெரியனார் ஒரு பாடலும், மருதனிள நாகனார்கே இரண்டு பாடலும், ஒளவையார் ஒன்றும், கருவூர்க்கதப் பிள்ளை ஒன்றும்" ஆக ஐந்து பாடல்கள் புறநானுாற்றில் இடம் பெற்றுள்ளன. 3. நன்னன் : இவன், மலை நாட்டின் வடவெல்லைப் பகுதியை ஆண்டு வந்த வேளிர் மரபினன். நன்னன் வேண் மான், நன்னன் உதயன் எனவும் இவன் வழங்கப்படுவான். கொண்கான நாட்டு ஏழிற் குன்றமும், பாழிச் சிலம்பும் இவன் மலைகளாம். வியலூர், பாழி, பாரம், கடம்பன் பெருவாயில் என்பன இவன் நாட்டு ஊர்களிற் சிறந்தவை. இவன் பல போர்களில் ஈடுபட்டு வல்லமையுடன் விளங்கி யிருக்கின்றான். இவனுடைய் பாழி மலையில் பொற் சுரங்கமும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. மிஞரிலி என்பவன் இவனுடைய படைத்தலைவன். இந்நன்னன் சேரர் தொடர்புடையவன் என்பது நன்னனுதியன்' எனச் சேரர் பெயரை இவன் தரித்திருத்தலால் கருதப்படு கின்றது என்பர் அறிஞர். இவனைப் பற்றி மாமூலனார்8ே மூன்று பாடல்களிலும், பரணர் இரண்டு பாடல்களிலும், முள்ளிலுார்ப்பூதியார் 79 ஒரு பாட்டிலும், மோசிகீரனார் பாடல் ஒன்றிலும் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் அகநானுாற்றுப் பாடல்கள். 64. 137. 65. 138, 139. 66. 140. - - 67. 380. . . -- 68. 15, 97, 349. --- 69. 258, 356. 70. 173. 71. 392.