பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v1. சேரர் நாடு, மலை, ஊர்கள், திருவிழா முதலியன சேரர்களுடைய நாடு, ஊர்கள், மலை ஆகியன பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் குறிப்பிடப்படு கின்றன. இலக்கியக் கோப்புக் கெடாத வகையில் தகுந்த இடங்களில் தேவையான அளவே இடம் பெறுவதால் சில வற்றைப் பற்றிக் குறுகிய அளவில்தான் அறிய முடிகிறது. 1. குடநாடு : மாமூலனார் பாடிய அகநானுாற்றுப் பாடலில் குடநாடு பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. ஆறலை கள்வர் வாழும் ஒடுங்காட்டுக்கு அப்பால் உள்ளது குடநாடு. அந்நாட்டைக் குட்டுவன் காப்பதால் பசி யென்பதை அறியாத மருத நிலத்து ஊர்களையுடையதும், எருமைகள் தாமரைகளை மேய்ந்து தெவிட்டி வெறுக்கு மாயின்பலாவின் கொழுவிய நிழற்கண்ணே தங்குவது மாகிய வளமிக்கது என்பதும், சேரனது குடநாடு ஒடுங்காடு என்ற இடத்திற்கு வடக்கில் உள்ளது என்பதும் அறியப் படும் செய்திகளாம்." - 2. வஞ்சிமாநகர் : வளைந்த விற்படையை உடைய சேரனுடைய வஞ்சி என்று மணிமேகலையுள்’ குறிப்பிடப் படுகின்றது. அவ்வஞ்சி நகரத்தைப் பற்றிய பல வகைச் சாதியார், தொழிலாளர் இருக்கும் வீதிகளையும் மற்றும் பல இடங்களையும் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சேர வேந்தன் பாதுகாவலுடன் காக்கின்ற வஞ்சி என்று அகநானூற்றில் சுட்டப்படுகின்றது. o 3. கருவூர் : பெரிய யா ைன ப் படையினையும் நெடிய தேர்ப் படையினையு முடைய சேர வேந்தனு 1. அகம்; 91; 12.17. 2. மணிமேகலை; 28: 1-136. 3. 263; 11-12. சே. செ. இ-49