பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/763

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 டையது செல்வம் மிக்க அகன்ற நகராகிய கருவூர். அதன் அருகில் பாயும் ஆன் பொருனை என்னும் ஆறு மணலைக் கொண்டு வந்து குவித்து வைக்கும். 4. முசிறி : பிடித்த மீன்களை நெல்லுக்கு ஈடாக விற்றுக் குவித்து, அந்நெற் குவியலை ஏற்றிய தோணியால் மனைகளை மறுகச் செய்வதும், மனையிற் குவிக்கப்பட்ட மிளகு மூடைகளால் ஆரவார மிக்க கடலைக் கலங்கச் செய்வதும், மரக்கல மேற்றிவந்த பொற்பரிசம் கழித் தோணிகளாற் கரை சேர்க்கப்படுவதும் என மலைப் பண்டங்களையும் கடற் பண்டங்களையும் ஒரு சேரக் கொண்டு தன்கண் வருவார்க்குக் கொடுக்கும் குட்டுவனது கடல் முழக்கம் பெற்ற முசிறி என்று வரலாற்றுப் புலவர் பரணர் குறிக்கின்றார். சேரரின் சுள்ளியம் பேரியாற்றில் யவனரது வேலைப் பாடமைந்த மரக்கலங்கள் பொன்னை ஏற்றி வந்து, அப்பொன்னுக்கு ஈடாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வளமிக்கது. அக்கலங்கள் கொள்வதும் கொடுப்பதும் அப்பேரியாற்றிற்குள் உள்ள முசிறி என்ற பட்டினத்தில் எனப்படுகின்றது. ஒரு காலத்தில் அம்முசிறிப் பட்டினத்தைப் பாண்டியன் ஒருவன் முற்றுகையிட்டமையும் சொல்லப்படுகின்றது. . . 5. தொண்டி : கீழ்க் காற்றால் விளக்கம் பொருந்திய கடலின் அலைகள் உடைக்கும் மணல் மேட்டில் கிடக்கும் பழைய படகின் சிதைவு போக்கிப் புதுக்கிய புதிய வலையினையுடைய பரதவர்கள் உயர்ந்த மணலையுடைய அடைகரையில் வந்து கிடக்கும் சுறாமீனின் கொள்ளை பினை மணம் நாறுகின்ற பாக்கத்தினர்கள் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் வளமிக்கது தொண்டி என்னும் பட்டினம்." கடலில் மீன்பிடிக்கச் சென்ற தந்தைக்கு 4. அகம்; 93 : 20.23. 5. புறம்: 343 : 1.10. 6. அகம்; 149 : 7-13. 7. அகம்; 10 : 8.13.